மரியாதைக்குரிய நண்பர்களே,வணக்கம்.
இது தினமலர் நாளிதழில் வெளியான செய்தி.
காலை 8.00 முதல் 11.00 மணி வரை, மாலை 4.00 முதல் 8.00 மணி வரை கனரக
வாகனங்கள் நகருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்நேரங்களில் கனரக வாகனங்கள் நகருக்குள் நுழைவதோடு, ரோடுகளை
ஆக்கிரமித்து நிறுத்தி, சரக்குகள் இறக்கப்படுகின்றன. முக்கிய ரோடுகளில்
திருப்புவதற்கு முயற்சிக்கும்போது, போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால்,
பள்ளிகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகளுக்கு செல்பவர்கள், கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.நெரிசல் மிகுந்த நேரங்களில் ஒரு இடத்தை கடக்க ஒரு மணி நேரத்துக்கும்
மேலாகிறது. விதிமுறையை மீறி நகருக்குள் நுழையும் கனரக வாகனங்கள் மீது
அபராதம்மட்டுமே விதிக்கப்படுகிறது.திருப்பூருக்குள் நுழைய, பல்லடம் ரோடு, அவிநாசி ரோடு, தாராபுரம் ரோடு,
காங்கயம் ரோடு, ஊத்துக்குளி ரோடுகளில் போலீஸ் செக்போஸ்ட்கள் உள்ளன. இங்கு
பணியில் இருக்கும் போலீசார், கனரக வாகனங்கள் நுழைவது குறித்து
கண்டுகொள்வதில்லை. நகருக்குள் சுற்றி வரும்போது, போலீசிடம் சிக்கினாலும், தடை உள்ளது தெரியவில்லை என்ற காரணத்தை டிரைவர்கள் கூறி, சமாளிக்கின்றனர். எனவே, அனைத்து செக்போஸ்ட்களிலும் முறையாக அறிவிப்பு வைக்க வேண்டும்.
செக்போஸ்ட் பணியிலுள்ள போலீசார், கனரக வாகனங்களை கண்காணிப்பதோடு, தடை
செய்யப்பட்ட நேரங்களில் நகருக்குள் செல்ல அனுமதிக்கக் கூடாது.
இது தினமலர் நாளிதழில் வெளியான செய்தி.
திருப்பூர் : நெரிசல் மிகுந்த நேரங்களில் நகருக்குள்
நுழையும் கனரக வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கிறது.
நகர எல்லையிலுள்ள செக்போஸ்ட்களில், அவ்வாகனங்களை
தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.திருப்பூரில் அபரிமிதமான வாகன போக்குவரத்து உள்ளது. பள்ளி,
கல்லூரிகள் மற்றும் அலுவலகங்கள்,
வேலைக்குச்
செல்பவர்கள் என காலை, மாலை
நேரங்களில் வாகன
நெரிசல் அதிகளவு காணப்படுகிறது. பீக் ஹவர்ஸ் எனப்படும், காலை 8.00 முதல் 11.00 மணி வரை, மாலை 4.00 முதல் 8.00 மணி வரை கனரக
வாகனங்கள் நகருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்நேரங்களில் கனரக வாகனங்கள் நகருக்குள் நுழைவதோடு, ரோடுகளை
ஆக்கிரமித்து நிறுத்தி, சரக்குகள் இறக்கப்படுகின்றன. முக்கிய ரோடுகளில்
திருப்புவதற்கு முயற்சிக்கும்போது, போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால்,
பள்ளிகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகளுக்கு செல்பவர்கள், கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.நெரிசல் மிகுந்த நேரங்களில் ஒரு இடத்தை கடக்க ஒரு மணி நேரத்துக்கும்
மேலாகிறது. விதிமுறையை மீறி நகருக்குள் நுழையும் கனரக வாகனங்கள் மீது
அபராதம்மட்டுமே விதிக்கப்படுகிறது.திருப்பூருக்குள் நுழைய, பல்லடம் ரோடு, அவிநாசி ரோடு, தாராபுரம் ரோடு,
காங்கயம் ரோடு, ஊத்துக்குளி ரோடுகளில் போலீஸ் செக்போஸ்ட்கள் உள்ளன. இங்கு
பணியில் இருக்கும் போலீசார், கனரக வாகனங்கள் நுழைவது குறித்து
கண்டுகொள்வதில்லை. நகருக்குள் சுற்றி வரும்போது, போலீசிடம் சிக்கினாலும், தடை உள்ளது தெரியவில்லை என்ற காரணத்தை டிரைவர்கள் கூறி, சமாளிக்கின்றனர். எனவே, அனைத்து செக்போஸ்ட்களிலும் முறையாக அறிவிப்பு வைக்க வேண்டும்.
செக்போஸ்ட் பணியிலுள்ள போலீசார், கனரக வாகனங்களை கண்காணிப்பதோடு, தடை
செய்யப்பட்ட நேரங்களில் நகருக்குள் செல்ல அனுமதிக்கக் கூடாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக