சனி, 28 ஜூன், 2014

மழைநீர் சேமிப்போம்.

தேசிய மழைநீர் விழிப்புணர்வு இயக்கம்-தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
               தண்ணீர் பலவகைகளிலும் நமக்கு பயன்படுகிறது.ஒரு கிலோ தானியத்தை உற்பத்தி செய்ய ஆயிரம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது.ஒரு கிலோ மாட்டிறைச்சிக்கு 13ஆயிரம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது.
ஆசியாவில் தனி மனிதனின் ஒரு நாளின் தண்ணீர் பயன்பாடு 1400லிட்டர் ஆகும்.அதுவே ஐரோப்பா வட அமெரிக்கா போன்ற நாடுகளில் தனி மனிதனின் தண்ணீர் பயன்பாடு 4000லிட்டர் தண்ணீர் ஆகும்.எனவே தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.உலக தண்ணீர்க்குழு இயக்குநர் டேனியல் ஜிம்மர்.WORLD WATER COUNCIL ( ஆதாரம்  - THE HINDU19 - 3-2003)
ஒரு கிலோ தேலைப் பதப்படுத்த 25லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது.ஒரு கிலோ துணிகளுக்கு சாயம் ஏற்ற 80லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது.
ஒரு தேக்கரண்டி பாதரசக்கழிவு 25ஏக்கர் பரப்புள்ள ஒரு குளத்தையே மாசுபடுத்திவிடும்.
     
 உலக அளவில் தண்ணீரின் தேவை மிகுதியாகிக்கொண்டே செல்கிறது.வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதும்,வறட்சி ஏற்படுவதும் மாறி மாறி வருகிறது.பருவநிலை மாறி வருகிறது.மழைவளம் மிகுந்த நாடு இந்தியா.அப்படியானால் வறட்சியும்,பஞ்சமும் அடிக்கடி ஏன் ஏற்படுகின்றன?இயற்கைதான் காரணமா?அல்லது நாமாக ஏற்படுத்திக்கொண்டோமா? பூமி வெப்பமடைந்து பனிமலைகள் உருகுகின்றன.துருவப்பகுதிகளில் பெரிய,பெரிய பனிமலைகள் 120க்கும் மேல் இருந்தன.ஆனால் இன்று 40 மலைகளே உள்ளன.
காடுகள் மூன்றில் ஒரு பங்கு மழைநீரை சேர்த்து ஆண்டு முழுவதும் தெளிவான தண்ணீரை  மெல்ல,மெல்ல நமக்கு வழங்கி வந்தன.மரங்கள் வெட்டப்பட்டு காடுகள் அழிக்கப்பட்டதால் திடீர் வெள்ளம் நாடு நகரங்களை அடித்துச்செல்கிறது.மலைகளில் 60 சதம் அடர்ந்த மரங்கள் இருக்க வேண்டும்.மலைப்பகுதிகளில் ஒரு அடி மண் உருவாக பத்தாயிரம் ஆண்டுகள் ஆகின்றன.அந்த மண் ஒரே மழையில் அடித்துச்செல்லப்பட்டு மண் வளத்தை குறைக்கிறது.வளமான மண் இல்லையென்றால் பயிர் வளம் குறையும்.உணவு உற்பத்தி குறையும்.உலக அளவிலு மூன்றில் ஒரு பங்கு மக்களுக்கு தகுதியான தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.
சமூகவிரோதிகள் ஆற்றின் ஒரு பக்கம் தூய நீரை உறிஞ்சி எடுக்கின்றனர்.மறுபக்கம் மாசுபட்டகழிவுநீரைக் கலக்கிவிடுகின்றனர்.இதற்கு தீர்வு என்ன?கங்கை,யமுனை,கோதாவரி,காவிரி புனிதமானது,தூய்மையானது என்று கூறியதெல்லாம் பொய்யாகிவிட்டது.தமிழகத்திலுள்ள பவானிஆறு, பாலாறு,நொய்யல் ஆறு,காவிரி ஆறு  அனைத்தும் வறட்சியில் சிக்கி உள்ளன.மாசுபட்ட நீரையே சுமந்து செல்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக