மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.சுற்றுச்சூழல் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
தண்ணீர் அனைவருக்கும் சொந்தம்.எல்லா உயிர்களுக்கும் பொதுவானது.நாடு,மொழி,மதம்,இனம் கடந்து நிற்பது தண்ணீர்.
இன்று நாம் அருந்தும் நீர்,பழமைக்கும் பழமை!.புதுமைக்கும் புதுமை!!.
தண்ணீரைக்கூட கைகளால் அள்ளி எடுக்க முடியும்,ஐஸ்கட்டி ஆகும்வரை காத்திருந்தால்!
உலக அளவில் சிந்தித்து உள்ளூரில் செயல்படுக.
தண்ணீர் அமுதம்.தண்ணீர் உயிர்.தண்ணீர் உயிர்களுக்கெல்லாம் உயிர்.வாழ்வின் அடிப்படை.தாயினும் சிறந்தது தண்ணீர்.
எங்கு பார்த்தாலும் தண்ணீர்.விரிந்து பரந்து கிடக்கும் கடல்.உறைந்து கிடக்கும் பனிமலை.ஆறு,குளம்,ஏரி,கால்வாய், எல்லாம் தண்ணீர்மயம்.ஆனால் தாகம் தீர்க்க குடிப்பதற்காக உயிர்கொடுக்கத் தகுதியுடையது எது? கலப்படம் இல்லாத தண்ணீர்,மாசுபடாத தண்ணீர்,தூய தண்ணீர் அதாவது சுத்தமான தண்ணீர்.
தண்ணீர்,தண்ணீர் எங்கணுமே;தாகம் தீர்க்க வழியில்லையே! என்றார் கவிஞர் ஒருவர்.தண்ணீர் மனித வாழ்வோடு எப்படியெல்லாம் ஒட்டி உறவாடிக் கொண்டிருக்கிறது!.
தண்ணீர் தாகம் தீர்க்க,உணவாக,குளிக்க,நீந்தி விளையாத,மிதவைக்கலனாக,தூய்மை உருவாக்க,கரைக்க,வெப்பம் தணிக்கப் பசுமையாக்க,உணவை உருவாக்க,ஆற்றல் தரும் மின்சக்தியாக,இப்படி ஐம்பதிற்கும் மேலான உதவிக்கரம் நீட்டும் உற்ற நண்பன் தண்ணீர்.
தண்ணீர்,உயிர்களெல்லாம் ஒருங்கிணைந்து பின்னிப்பிணைந்து வாழ்ந்துகொண்டிருக்கும் இடம் தண்ணீர் இருக்கும் இடம்.
அறிவியல் உலகம் வான மண்டலத்தில் ஆராய்ந்து தேடுவது தண்ணீர் இருக்கும் இன்னொரு கோள்தாங்க!
தண்ணீர் வரலாறு- கோடி ஆண்டுகளாக கொதித்த பூமி குள்ந்தது.வான மண்டலநீராவி என்னும் காற்று குளிர்ந்து உருவானது தண்ணீர்.இதனால் பூமியின் பள்ளங்கள் தண்ணீரால் நிறைந்தன.இதுவே தண்ணீரின் வரலாறு.
வானமழை தூய்மையானது.சுவை,நிறம்,மணம் அற்றது.அது பூமியில் வீழ்ந்து உயிர்வாழ்வை மலர வைக்கிறது.மீண்டும் ஆவியாகிக் குளிர்ந்து மழையாகி மீண்டும் பூமியில் பெய்கிறது.இவ்வாறாக ஒரு இயற்கையான சுழற்சிமுறை.
தண்ணீர் எங்கும் நிறைந்திருந்தாலும் 98 விழுக்காடு பயன்படுத்துவதற்குத் தகுதியற்றது.ஒரு விழுக்காடு பனிமலையாகத் துருவங்களில்,உயர்ந்த மலைகளில் உறைந்து கிடக்கிறது.அப்படியானால் நமக்கு ஒரு விழிக்காட்டிற்கும் குறைவாகவே துய தண்ணீர் கிடைக்கிறது.
நாடுகளை எல்லாம் கடந்து பறவைகள் தண்ணீரைத் தேடி நம் ஏரிகளில் தஞ்சம் அடைகின்றன.குளங்களில் காலை,மாலை குளித்து எழும் காக்கை நம் முற்றத்தில் குடத்து நீரைச் சுவை பார்க்கிறது.ஆனால் இன்று தண்ணீர் விலை பேசப்படுகிறது.ஏழை,எளியவருக்குக் கிடைக்காத பொருளாகி வருகிறது.
தண்ணீர் கிடைக்காத பொருளா?தண்ணீருக்குத் தட்டுப்பாடா? வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.வீடுகளை,ஊர்களை, அழித்துக் கடலைப் போய் சேருகிறது.மீண்டும் நாம் தண்ணீருக்காக அலைமோதுகிறோம்.தண்ணீருக்காக நாட்டுக்கு நாடு,வீட்டுக்கு வீடு, போட்டி,பொறாமை,சண்டை.ஆமாங்க தண்ணீருக்காக சண்டை.
ஒரு பக்கம் தண்ணீர் வெள்ளமாய் ஓடுகிறது.மறுபக்கம் தண்ணீருக்கான தட்டுப்பாடு.பேய்மழை பெய்து தண்ணீர் பெருக்கெடுத்து ஓடினாலும் அப்போதும் நமக்குத் தேவை குடிக்கத் தகுதியான தூய்மையான தண்ணீர்தாங்க.அவ்வாறு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடினாலும்,நம்மைச்சூழ்ந்து இருந்தாலும் அந்த தண்ணீரை குடிக்க முடியுமா?அந்த தண்ணீரையெல்லாம் கடந்து சென்று குடிக்க தகுதியான தண்ணீரைத்ததானே தேடுவோம்!.
ஆறறிவு படைத்த மனிதன் தண்ணீர் இல்லாமல் அல்லல்படலாமா?இதற்கெல்லாம் தீர்வு காண வேண்டாமா?
தொடரும்......(1)
(பார்வை-665)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக