ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2012

ஓட்டுனர்- சிக்கலும்,தீர்வும்

மரியாதைக்குரிய 
     அனைத்து ரக வாகன ஓட்டுனர் பெருமக்களே,
      அனைவருக்கும் இனிய வணக்கம். 
         வாகனம் ஓட்டும்போது நாம் பல்வேறு பிரச்சினைகளையும்,சிக்கல்களையும்,துன்பங்களையும் சந்திக்க நேரிடுகிறது.வளர்ந்து வரும் நாகரீக உலகில் வாகனப்பெருக்கம் அளவுகடந்த வண்ணம் அதிகரித்து வருகிறது.அதற்கேற்ப சாலைவசதியின்றி,பொதுமக்கள் தகுந்த விழிப்புணர்வுமின்றி,நமக்கும் ஆதரவு ஏதுமின்றி விபத்து உட்பட பல பழிபாவத்தை ஓட்டுனர்களாகிய நாமே ஏற்க வேண்டிய பரிதாபமான சூழ்நிலையில் நமது வாழ்க்கைச்சக்கரத்தையும் ஓட்டிக்கொண்டு இருக்கிறோம்.
               இனிவரும் காலங்களில் நம்மால் இயன்றளவு கவனமாக வாகனத்தை இயக்கியும்,தன்னம்பிக்கைகொண்டு சாலைவிதிகளை மதித்தும்,அனுசரித்தும்,பொறுமை காத்தும் தகுந்த விழிப்புணர்வுடன் வாகனத்தை இயக்கியும், தன்னொழுங்கு பேணியும்,நமதுகுடும்பத்தை  காத்தும், நமது ஓட்டுனர் தொழில் கலைநயம்கொண்ட ஆர்வமிக்க தொழில் என்பதை உணர்ந்து கவனமுடன் பணியாற்ற உறுதி கொள்வோம்.
                   மற்றும் நமது ஓட்டுனர் தொழிலில் ஏற்படும் பிரச்சினைகள், அந்த பிரச்சினைக்கு தொழில் சார்ந்த ஓட்டுனர்களாகிய நம்மீது தவறில்லாமலேயே குற்றத்திற்கு ஆளாவதும்,மோசமானவர்களாக,கேவலமானவர்களாக,முரடர்களாக  சமூகத்தின் பார்வையில் காணப்பட்டு வருகிறோம்.
                 இந்த தவறான சமூகப்பார்வையிலிருந்து விடுபட வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அதனால் நாம் அனைவரும் ஒன்றிணைந்து நமது அன்றாட பிரச்சினைகளை கலந்து அதற்கு தீர்வு காண வேண்டும்.சமூகத்திற்கு நாமும் ஒழுக்கமுள்ளவர்களே,சராசரி மனிதர்களே,குடும்பஸ்தர்களே, இரக்க உணர்வு உள்ளவர்களே,பிறரை மதிப்பவர்களே, என நம்மை நாம் வெளிப்படுத்தவேண்டியதாக உள்ளது. ஓட்டுனர்களாகிய நமது நிலை பற்றி,நமது சூழ்நிலை பற்றி, இணையத்திலும் பதிவிட்டு சமூகத்துடன் விவாதித்து உண்மைநிலை பற்றி பதிவிடுவோம்.
                     அதற்காக ஓட்டுனர்களாகிய நாம் அனைவரும் ஒன்றுபட அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். வாருங்கள் கோபி மாநகருக்கு. அவ்வப்போது கூடி தொழில்ரீதியான பிரச்சினைகள் எவ்வாறு உருவாகின்றன.அதற்கான தீர்வுகள் என்ன?வருங்காலத்தில் நம்மையே நம்பி உள்ள நமது குடும்பம் மற்றும் குழந்தைகளின் முன்னேற்றத்திற்கான வழிகள் என்ன? என விவாதிக்கலாம் வாங்க! நல்வாழ்க்கைக்கான முடிவு எடுக்கலாம் வாங்க!!
  குறிப்பு;- இடம் தேதி விரைவில்இங்கு பதிவிட்டு அறிவிக்கப்படும்.அதுவரை பொறுத்தருள வேண்டுகிறோம்.

2 கருத்துகள்:

  1. நல்ல முயற்சி வாழ்த்துக்கள் இடம் தேதி விரைவில் எதிர் பார்க்கிறேன்

    பதிலளிநீக்கு
  2. மரியாதைக்குரிய நண்பரே,வணக்கம். தங்களது பதிவுக்கு மிக்க நன்றிங்க! ஓட்டுனர் உரிமம் இருந்தாலே அவரும் ஓட்டுனரே!என்பதை தங்களது கவனத்திற்கு கொண்டுவருகிறேன்.நன்றிங்க!

    பதிலளிநீக்கு