மரியாதைக்குரியவர்களே,வணக்கம். அனைவரும் konguthendral.blogspot.com வலைப்பக்கத்தை பாருங்க!
மழைநீரை சேமிப்போம்! நிலத்தடிநீரை காப்போம்!!.
காற்று,நிலம்,தண்ணீர் வாழ்வின் உயிர்நாடி!
ஞாயிறு, 14 செப்டம்பர், 2014
புதன், 23 ஜூலை, 2014
சனி, 28 ஜூன், 2014
உலகஅளவில்பூமிவெப்பம்,ஓசோன்அழிவு,மழைகுறைவு,வெள்ளப்பெருக்கு,வறட்சி
போன்றவை பிரச்சினையாக உருவெடுத்து வருகின்றன.இந்திய அளவில் ஆறுகள்
பெருக்கெடுத்து ஓடினாலும் தண்ணீர் தட்டுப்பாடு,மாசுபாடு ஆகியவை கவலைதரும்
விசயமாக உள்ளது.
இன்றுபல்வேறுஆலைக்கழிவுகள்,மாநகராட்சி,நகராட்சி,பேரூராட்சி,என ஊர்கள் பெருக்கத்திற்க்கேற்ப சாக்கடைக் கழிவுகள் ஆறுகளில் கலந்து மாசுபட்டு வருகின்றன.நகரங்களில் குடியிருப்புகள் பெருகி வருகின்றன.குடியேறிய பகுதிகளில் காற்றும் மாசுபட்டு வருகிறது.தண்ணீரும் மாசுபட்டு வருகிறது.குப்பைகளும் பெருகி வருகின்றன.
குறைந்த ஆழத்தில் கிடைத்துவந்த நிலத்தடி நீர் இப்போது ஒருவருக்கொருவர் போட்டி போட்டு ஆயிரம் அடி ஆழத்திற்கு ஆழ்துளைக்கிணறு அமைத்தாலும் நிறைவாய்,தூயதாய் தண்ணீர் கிடைப்பதில்லை.
வீட்டு முற்றங்களும்,சுற்றுப்பகுதிகளும் கான்கிரீட் தளங்களால் மூடப்பட்டு அதனால் மழைநீரும் வீணாக ஓடி சாக்கடையில் கலந்து சென்றுவிடுகிறது.எல்லா வசதிகளும் படைத்த இந்த வீடுகளில் தண்ணீர் மருந்துக்கும் கிடைப்பதில்லை.வசதி படைத்தவர்கள் தண்ணீரை லாரி போன்ற வாகனங்களில் விலைக்கு வாங்கிக்கொள்கின்றனர்.
மழைநீரை சேமிப்பதே சிறந்தது.
தொழிற்புரட்சி காரணமாக தோல் தொழிற்சாலை,காகிதத்தொழிற்சாலை,சாயத்தொழில், என பல்வேறு தொழிற்சாலைகள் பெருகின.அத்துடன் அந்த ஆலைகள் ஆற்றங்கரைகளில் அமையவும் அனுமதி பெற்றன.ஆற்றுநீரை உறிஞ்சி எடுத்தும்,ஆழ்துளை கிணறு அமைத்தும் தண்ணீரை உறிஞ்சி ஆலைகளுக்கு பயன்படுத்தினர்.இதனால் நிலத்தடி நீர் குறைந்தது.ஆலைக்கழிவுகள் ஆற்றில் கலந்து,நிலத்தடிநீரில் கலந்து மாசுபட்ட தண்ணீரையே அப்பகுதி மக்கள் குடிக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த ஐம்பது ஆண்டுகளில் விவசாயப்புரட்சி என்னும் பெயரில் செயற்கை உரங்களும்,செயற்கை விதைகளும் பயன்படுத்தப்பட்டது.இதனால் தண்ணீரின் இயற்கைத்தன்மை கெட்டது.மண் உவர்ப்பாக மாறி மாசு அடைந்தது.உயிர்த்தன்மை இழந்ததால் பயிர்வளம் கெட்டது.செயற்கை விதை மற்றும் செயற்கை உரங்களினால் தண்ணீர் தேவை மிகுதியானது. தண்ணீர் மிகுதியாக தேவைப்படும் பயிர்களான நெல்,கோதுமை,கரும்பு பயிரிடப்பட்டன.கம்பு,சோளம்,கேழ்வரகு,சிறுதானியங்கள் பருப்பு வகைகளின் உற்பத்தி குறைந்தது.
தண்ணீர் தேவை மிகுதியால் பற்றாக்குறை காரணமாக மாநிலங்களுக்கிடையே போட்டி அதிகமானது.ஆங்காங்கே ஆற்றின் குறுக்கே அணைகள் கட்டுவதும்,அடுத்த மாநிலங்களுக்கு தண்ணீர் தர மறுப்பதும் அன்றாட நிகழ்ச்சி ஆகி விட்டது.பூச்சிகளை மனிதனின் எதிரியாக நினைத்து அதனை அழிக்க மருந்து என்ற பெயரில் பூச்சிக்கொல்லிகளை அடித்தனர்.வயல்களில் நஞ்சு கலந்தன.உணவுச்சங்கிலி விளைவால் பூச்சிக்கொல்லி மருந்தின் நஞ்சானது பல்வேறு இடங்களுக்கும் பரவியது.
நாகரீக உலகில் குடியிருப்புகளுக்கு தண்ணீரின் தேவை மிகுதியானது.கழிவறைகளுக்கு விலைமதிப்பற்ற குடிநீரை பயன்படுத்துகிறோம்.ஒரேமுறை பயன்படுத்தப்பட்டு சாக்கடையில் செலுத்துகிறோம்.சுமாராக நான்கு பேர் கொண்ட வீடு ஒன்றிற்கு ஆண்டிற்கு 90,000லிட்டர் தண்ணீர் கழிவறைக்கு பயன்படுத்தப்படுகிறது.துணி துவைக்க,பாத்திரம் கழுவ,குளிக்க என ரசாயனக்கலவை சோப்புகளும்,பாஸ்பேட் அதிகம் கொண்ட டிடர்ஜென்ட் துவக்கும் சோப்புகளும்,நச்சுத்தன்மை கொண்ட வேதியியல் பொருட்களும் பயன்படுத்தி தண்ணீரை மாசுபடுத்துகிறோம்.
ஆறுகள் இயற்கையாக ஓடி கடலில் கலப்பதை தடுக்கப்பட்டு இயற்கை சுழற்சி முறைகள் தடையாகின.கடல் குப்பை கொட்டும் இடமாக மாறிவருகின்றது.அணு சோதனை நடத்தும் இடமாக மாறிவருகிறது.ஆலைக்கழிவுகளும்,பாதரசக்கழிவுகளும்,சாக்கடைநீரும் கலக்கும் இடமாக கடல் மாறிவிட்டது.அணுக்கழிவுகளும்,அனல்மின் சாம்பல்,பெட்ரோலியக்கழிவுகள் கடலில் கலக்கின்றன.பெரிய கப்பல்களில் பெரிய வலை கொண்டு மீன் பிடிக்கப்படுகின்றன.பவளப்பாறைகள்,முத்து,அரிய கனிமங்கள் என கடல் வளம் அனைத்தும் மனிதனால் சுரண்டப்படுகின்றன.
தண்ணீர் ஒவ்வொரு மனிதனின் அடிப்படை உரிமை.தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவோம்.மாசுபடாமல் காப்போம்.
மனிதன் வாழ்வதற்கான இடம் பூமி ஒன்றே!.இதில் அமைந்துள்ள இயற்கை வளங்களும் குறிப்பிட்ட அளவுதான் உள்ளன.எனவே புதுப்பிக்கும் ஆற்றல் வளங்களான சுயற்சிமுறையில் கிடைக்கும் காற்றையும்,தண்ணீரையும் நேர்மையான வழியில்,சிக்கனமாக அனைவரும் பயன்படுத்த வேண்டும்.
காற்று மாசுபடும் தொழில்களுக்கு எதிராக குரல் கொடுப்போம்.பசுமை இல்லத்தில் வெளியாகும் தீய காற்று ஓசோன் படலத்தை ஓட்டையாக்கும்.அதனால் புற ஊதாக்கதிர்கள் நம்மை தாக்கும்.பூமி வெப்பம் மிகும்.மழைவளம் குறையும்.
மழை இப்போதும் பெய்துகொண்டுதான் இருக்கிறது.மனித மனங்கள்தாம் மாற வேண்டும்.
தண்ணீர் சமுதாயத்தின் பொதுச்சொத்து.தண்ணீரை மாசுபடுத்தாமல் அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

தமிழக முதல்வர் அவர்கள், அம்மா குடிநீர் விற்பனை.
மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.தேசிய குடிநீர் விழிப்புணர்வு இயக்கம் - தமிழ்நாடு.
வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.குடிநீர் சேமிப்பு,மழைநீர் சேமிப்பு,தூய நீர் விழிப்புணர்வு,தண்ணீர் மாசு தவிர்ப்போம்,இயற்கை வளங்களை காப்போம்,மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்,மூலிகைத்தாவரங்கள் பாதுகாப்போம், என பல்வேறு தளங்களில் தண்ணீரை சேமிக்கவும்,தண்ணீரின் அவசியத்தை வலியுறுத்தவும்,
தேசிய குடிநீர் விழிப்புணர்வு இயக்கத்தில்.
அனைவரும் உறுப்பினராக சேர்ந்து தண்ணீரின் அவசியத்தை உணர வேண்டுகிறோம்.வருங்கால சந்ததியினருக்கு தூயநீரை விட்டுச்செல்வோம்.

மழைநீர் சேமிப்போம்.
தண்ணீர் பலவகைகளிலும் நமக்கு பயன்படுகிறது.ஒரு கிலோ தானியத்தை உற்பத்தி செய்ய ஆயிரம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது.ஒரு கிலோ மாட்டிறைச்சிக்கு 13ஆயிரம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது.
ஆசியாவில் தனி மனிதனின் ஒரு நாளின் தண்ணீர் பயன்பாடு 1400லிட்டர் ஆகும்.அதுவே ஐரோப்பா வட அமெரிக்கா போன்ற நாடுகளில் தனி மனிதனின் தண்ணீர் பயன்பாடு 4000லிட்டர் தண்ணீர் ஆகும்.எனவே தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.உலக தண்ணீர்க்குழு இயக்குநர் டேனியல் ஜிம்மர்.WORLD WATER COUNCIL ( ஆதாரம் - THE HINDU19 - 3-2003)
ஒரு கிலோ தேலைப் பதப்படுத்த 25லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது.ஒரு கிலோ துணிகளுக்கு சாயம் ஏற்ற 80லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது.
ஒரு தேக்கரண்டி பாதரசக்கழிவு 25ஏக்கர் பரப்புள்ள ஒரு குளத்தையே மாசுபடுத்திவிடும்.
உலக அளவில் தண்ணீரின் தேவை மிகுதியாகிக்கொண்டே செல்கிறது.வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதும்,வறட்சி ஏற்படுவதும் மாறி மாறி வருகிறது.பருவநிலை மாறி வருகிறது.மழைவளம் மிகுந்த நாடு இந்தியா.அப்படியானால் வறட்சியும்,பஞ்சமும் அடிக்கடி ஏன் ஏற்படுகின்றன?இயற்கைதான் காரணமா?அல்லது நாமாக ஏற்படுத்திக்கொண்டோமா? பூமி வெப்பமடைந்து பனிமலைகள் உருகுகின்றன.துருவப்பகுதிகளில் பெரிய,பெரிய பனிமலைகள் 120க்கும் மேல் இருந்தன.ஆனால் இன்று 40 மலைகளே உள்ளன.
காடுகள் மூன்றில் ஒரு பங்கு மழைநீரை சேர்த்து ஆண்டு முழுவதும் தெளிவான தண்ணீரை மெல்ல,மெல்ல நமக்கு வழங்கி வந்தன.மரங்கள் வெட்டப்பட்டு காடுகள் அழிக்கப்பட்டதால் திடீர் வெள்ளம் நாடு நகரங்களை அடித்துச்செல்கிறது.மலைகளில் 60 சதம் அடர்ந்த மரங்கள் இருக்க வேண்டும்.மலைப்பகுதிகளில் ஒரு அடி மண் உருவாக பத்தாயிரம் ஆண்டுகள் ஆகின்றன.அந்த மண் ஒரே மழையில் அடித்துச்செல்லப்பட்டு மண் வளத்தை குறைக்கிறது.வளமான மண் இல்லையென்றால் பயிர் வளம் குறையும்.உணவு உற்பத்தி குறையும்.உலக அளவிலு மூன்றில் ஒரு பங்கு மக்களுக்கு தகுதியான தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.
சமூகவிரோதிகள் ஆற்றின் ஒரு பக்கம் தூய நீரை உறிஞ்சி எடுக்கின்றனர்.மறுபக்கம் மாசுபட்டகழிவுநீரைக் கலக்கிவிடுகின்றனர்.இதற்கு தீர்வு என்ன?கங்கை,யமுனை,கோதாவரி,காவிரி புனிதமானது,தூய்மையானது என்று கூறியதெல்லாம் பொய்யாகிவிட்டது.தமிழகத்திலுள்ள பவானிஆறு, பாலாறு,நொய்யல் ஆறு,காவிரி ஆறு அனைத்தும் வறட்சியில் சிக்கி உள்ளன.மாசுபட்ட நீரையே சுமந்து செல்கின்றன.
திங்கள், 16 ஜூன், 2014
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம்
மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.சுற்றுச்சூழல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
புலிகள் வசிப்பதற்கு கொஞ்சம் சமவெளி பகுதி.. அடர்ந்த வனப்பகுதி.. அதற்கு தேவையான உணவு.. தண்ணீர் வசதி.. இவை யாவும் புலிகள் வசிப்பதற்கு ஏற்ற இடம். இதில் ஒரு வசதிகூட இல்லை என்றாலும் அங்கு புலிகள் வசிக்காது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம்: வனச் சரக எல்லைகள் மாற்றம்

By
dn, சத்தியமங்கலம்
First Published : 10 December 2013 01:02 AM IST
சத்தியமங்கலம் வனக் கோட்டம் கடந்த 1-ஆம் தேதி முதல்
தேசிய புலிகள் ஆணையத்தின் வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி, புலிகள் காப்பக
உத்தரவு முழுமையாக அமலாக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, புதியதாக
உருவாக்கப்பட்டுள்ள தலமலை, கேர்மாளம் வனச் சரகங்களுக்கு எல்லைகள்
வரையறுக்கப்பட்டுள்ளன.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வனகோட்டத்தில் வன விலங்குகள் வசிப்பதற்கேற்ற சூழல் உள்ளது. அதனால், சத்தியமங்கலம் வனக் கோட்டம் கடந்த 2008-ஆம் ஆண்டு வன உயிரின சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. அதன்பின், ஆண்டுதோறும் நடைபெற்ற வனவிலங்குகள் கணக்கெடுப்பில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்ததையடுத்து தமிழக அரசின் பரிந்துரையின் பேரில், சத்தியமங்கலம் வன உயிரின சரணாலயத்தை புலிகள் காப்பகமாக மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சகம், கடந்த 1-ஆம் தேதி அறிவித்தது. அதன்படி, சத்தியமங்கலம் வனக் கோட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு, ஆசனூர், சத்தியமங்கலம் வனக் கோட்டமாக உருவாக்கப்பட்டது. தற்போதுள்ள 5 வனச் சரகங்களில் இருந்து சில பகுதிகள் பிரிக்கப்பட்டு தலமலை, கேர்மாளம் என மேலும் 2 வனச் சரகங்கள் புதியதாக அமைக்கப்பட்டுள்ளன.
பவானிசாகர் வனச் சரகத்திலிருந்து ஒண்ணத்திட்டு, தலமலை, பெஜலட்டி காவல் பகுதிகளுக்கு உள்பட்ட 11476.92 ஹெக்டேர் பரப்பளவுள்ள வனப் பகுதி தலமலை வனசரகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
ஆசனூர் வனச் சரகத்திலிருந்து கேர்மாளம் கிழக்கு, கேர்மாளம் மேற்கு, கெத்தேசால், காடட்டி, கோட்டமாளம் காவல் பகுதிகளுக்கு உள்பட்ட 18032.59 ஹெக்டேர் பரப்பளவுள்ள வனப் பகுதியும், தாளவாடி வனச் சரகத்திலிருந்து பெனக்கனஹள்ளி தெற்கு, வடக்கு காவல் பகுதிகளும் கேர்மாளம் வனச் சரகத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து, பவானிசாகர் வனச் சரகத்தின் பரப்பளவு 35,719 ஹெக்டேரிலிருந்து 24,242 ஹெக்டேராகவும், ஆசனூர் வனச் சரகத்தின் பரப்பளவு 28,845 ஹெக்டேரிலிருந்து 16,486 ஹெக்டேராகவும், தாளவாடி வனச் சரகத்தின் பரப்பளவு 28,553 ஹெக்டேரிலிருந்து 22,880 ஹெக்டேராகவும் குறைந்துள்ளது. சத்தியமங்கலம், டி.என்.பாளையம் வனச் சரக எல்லைகளில் மாற்றங்கள் ஏதும் செய்யப்படவில்லை.
நன்றி; தின மணி நாளிதழ்.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் வனத்துறையினர் எடுத்த கணக்கெடுப்பின்படி 15 புலிகள் இருந்தது. அடுத்த ஆண்டு அது 18 ஆக உயர்ந்து தற்போது 30 புலிகளாக உயர்ந்தது. ஆனால் அப்பகுதியை சேர்ந்த வன ஆர்வலர்கள் கூறும்போது, சத்தி வனப்பகுதியில் எப்படியும் குறைந்தது 50 புலிகள் இருக்கக்கூடும் என்று கூறினர்.

ஞாயிறு, 15 ஜூன், 2014
தண்ணீர் தொடர்ச்சி-02
உலக அளவில் தண்ணீர்ப் பிரச்சினை;-
மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.சுற்றுச்சூழல் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
நீர்வளம் என்பது வற்றாத,அள்ள அள்ளக்குறையாத அமுதசுரபி அல்ல.நீரைப் பயன்படுத்தும் விதத்திலேயே தண்ணீரின் தேவை நிறைவேறும்.
தண்ணீரின் முதல் தேவை தாகம் தீர்ப்பது.இரண்டாவது தேவை உணவு,தானிய உற்பத்திக்கு ஆகும்.
உலக அளவில் தண்ணீர்ப் பிரச்சினை;-
உலக அளவில் தண்ணீரின் தேவை மிகுதியாகிக்கொண்டே போகிறது. முன்றில் ஒரு பங்கு மக்களுக்கு தகுதியான குடிநீர் கிடைப்பதில்லை.2020ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகமாகும்.ஆசியாவில் ஒரு மனிதனின் ஒருநாளின் தண்ணீர்ப் பயன்பாடு 1400லிட்டர் ஆகும்.அதுவே ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா போன்ற நாடுகளில் ஒரு மனிதனின் தண்ணீரின் பயன்பாடு ஒரு நாளைக்கு 4000லிட்டர் ஆகும்.தண்ணீர் நமக்கு பலவகைகளிலும் பயன்படுகிறது.ஒரு கிலோ தானியத்தை உருவாக்க ஆயிரம் லிட்டர் தண்ணீரும்,ஒருகிலோ மாட்டிறைச்சி உருவாக்க பதிமூன்றாயிரம் லிட்டர் தண்ணீரும் தேவைப்படுகிறது.
தற்போதைய சூழல் காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதும்,தொடர்ந்து நீரின்றி வறட்சி ஏற்படுவதும் தொடர்கதையாகி வருகிறது.எதிர்பாராத மழை வெள்ளப்பெருக்கை ஏற்படுத்துகிறது.தடுத்து நிறுத்த இயற்கைக்காடுகள் இல்லை.மலைகளில் 60 விழுக்காடு அடர் காடுகள் இருக்க வேண்டும்.காடுகள் அதாவது அதிலுள்ள தாவரங்கள் மழைநீரில் மூன்றில் ஒரு பங்கு தண்ணீரை சேமித்து ஆண்டு முழுவதும் தெளிவான தண்ணீரை மெல்ல,மெல்ல வழங்கி வந்தன.காடுகள் அழிக்கப்பட்டுவிட்டதால் திடீர் வெள்ளம் நாடு நகரங்களை அடித்து செல்கிறது.வளமான மண்ணை ஒரே மழையில் அடித்து செல்கிறது.மலைப்பகுதிகளில் நல்ல வளமான மண் உருவாக பத்தாயிரம் ஆண்டுகள் ஆகின்றன.மண் வளம் குறைந்தால் பயிர்வளம் குறையும்.உணவு உற்பத்தியும் குறையும்.
இயற்கை ஒன்றோடு ஒன்று தொடர்பு உடையது.காற்றுமாசுபாடு ஓசோன் திரையைக்கிழிக்கிறது.கதிரவன் ஒளிக்கற்றை பூமியின் வெப்பத்தை மிகுதியாக்குகிறது.புற ஊதாக்கதிர்கள் நேரடியாக பூமியைச் சென்றடைகின்றன.பனிமலைகள் உருகுகின்றன.துருவப்பகுதிகளில் 120க்கும் மேலாக பனிமலைகள் இருந்தன.ஆனால் தற்போது 40 பனிமலைகளே உள்ளன.
(நன்றி;- World Water Council - The Hindu-19.3.2003)
தொழிற்புரட்சியின் பின்பு தண்ணீரின் தேவை மிகுதியாகிவிட்டது.தண்ணீர் மாசு அடைவதும் அதிகமாகி வருகிறது.எடுத்துக்காட்டாக ஒரு கிலோ தோலைப் பதப்படுத்த 25 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது.ஒரு கிலோ துணிகளுக்குச் சாயம் ஏற்ற 80 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது.
(நன்றி;-வாழ்வின் ஆதாரம்-நீர்,சி,பி,ஆர்,பவுண்டேசன் வெளியீடு)
அதே நேரத்தில் ஒரு தேக்கரண்டி பாதரசக்கழிவு 25 ஏக்கர் பரப்புள்ள ஒரு குளத்தை மாசுபடுத்திவிடும்.
இந்தியாவின் நிலைமை;-
உலகத்தில் அதிக அளவு மழை பெய்யும் சிரபுஞ்சியில் ஆண்டுக்கு 1100செ.மீ.மழை பெய்யும் சிரபுஞ்சியில் ஒன்பது மாதங்கள் தண்ணீர்த்தட்டுப்பாடு.ஆனால் ஆண்டுக்கு 10செ.மீ. மழை பெய்யும் ராஜஸ்தான் மக்கள் தண்ணீர்த்தட்டுப்பாடு இல்லாமல் ஐந்து ஆண்டுகள்வரைகூட தண்ணீரைப்போற்றிப்பாதுகாத்து வருகின்றனர்.
இந்தியா மழைவளம் நிறைந்த நாடு.ராஜஸ்தான் போன்ற சில பகுதிகளைத்தவிர மற்ற பகுதிகளில் மழையளவு குறையவில்லை.
அப்படியானால் ஏன் அடிக்கடி வறட்சியும், பஞ்சமும் ஏற்படுகின்றன.வறட்சியும்,பஞ்சமும் இயற்கையானதா?அல்லது நாமே உருவாக்கிக்கொண்டதா?
பத்து செ.மீ. மழை பெய்தால் ஒரு ஹெக்டேர் பரப்பில் கிடைக்கும்தண்ணீரின் அளவு 10இலட்சம் லிட்டர் தண்ணீர்.ஒரு ஆண்டுக்கு உரிய அதாவது 8760 மணி நேரத்திற்கு உரிய தண்ணீர் வெறும் 100 மணி நேரத்தில் இந்தியா தன் தேவைக்கான தண்ணீரைப்பெற்று விடுகிறது.அனைவரும் சிந்திக்கவேண்டும்.
கங்கை,யமுனை,காவிரி என வற்றாத ந்திகள் பாயும் வளமான நாடு நமது பாரதம்.நீர் வளமும் நிலவளமும் இருப்பதைக்கண்டு வெளிநாட்டவர் வியந்து போற்றினர்.ஆனால் தற்போது நிலைமையே தலைகீழாகி வருகிறது.
வான் பொய்ப்பினும் தான் பொய்யாக்காவிரிதாய் தற்போது நீரில்லை! என கையை விரிக்கிறாள்.கங்கையும்,காவிரியும் இணைத்துவிட்டால் நமது கனவு பலிக்கும் என பலர் நம்புகின்றனர்.இந்தியா மழைவளம் மிக்க நாடு.இந்திய மக்களின் குடிநீர்த்தேவையை நிறைவு செய்யவேண்டும்.
தண்ணீர் தேவை மிகுந்து வரும் இக்கால கட்டத்தில் இந்தியாவின் ஏதாவது ஒரு ஆற்றின் பெயரைச்சொல்லுங்கள்.கங்கை,யமூனை,கோதாவரி,காவிரி, என்று.அந்த ஆறு புனிதமானது.தூய்மையானது.அதில் குளித்தால் நோய் நீங்கும்.என்றெல்லாம் சொல்லி வந்த காலம் பொய்யாகிவிட்டது.தற்போது ஆறுகள் உட்பட ஏரிகள்,குளங்கள் போன்ற நீர்நிலைகளும் மாசுபட்டு உள்ளன.நிலத்தடி நீரும் மாசடைந்து வருகிறது.
தமிழகத்தில் பவானி,பாலாறு,நொய்யல்,காவரி அனைத்தும் மாசுபட்ட நீரை சுமந்து செல்கின்றன.காவரியை,கங்கையை தூய்மைப்படுத்த என பல திட்டங்கள் உருவாகின்றன.ஆனால் சமூகவிரோதிகள் ஆற்றின் ஒருபுறம் தூய நீரை உறிஞ்சி எடுக்கின்றனர்.மறுபுறம் மாசுபட்ட கழிவுநீரைக் கலக்கி விடுகின்றனர்.தட்டிக்கேட்கும் பலத்தை இழந்துநிற்கும் நமக்கு குடிநீரின் தேவையும் முக்கியத்துவமும் புரிய வேண்டும்.மக்களனைவரும் விழித்தெழ வேண்டும்.அரசாங்கத்தை தட்டி எழுப்ப வேண்டும்.தண்ணீர் தட்டுப்பாடும்,மாசு அடைவதும் மாபெரும் பிரச்சினையாக உருவெடுத்து வருவதை, குடிநீர் கிடைக்காமல் இறந்து போகும் நிலை உருவாவதை தடுக்க வேண்டும். மழை இப்போதும் பெய்துகொண்டுதான் இருக்கிறது.மனித மனங்கள்தாம் மாறி வருகின்றன.தண்ணீர் விற்பனைப்பொருளாக மாறி வருவது வேதனைக்குரியது.தண்ணீர் சமுதாயத்தின் பொதுச்சொத்து.இதை நேர்மையாக,மாசுபடுத்தாமல் முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
உலகளவிலே சிந்தித்து உள்ளூரிலே செயல்படுக என்ற சுற்றுச்சூழல் அறிஞர்களின் கருத்தினை உணரவேண்டும்.உலக அளவில் பூமி வெப்பம்,ஓசோன் அழிவு,மழை குறைவு,வெள்ளம்,வறட்சி போன்றவை.இந்திய அளவில் ஆறுகள் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடினாலும் தண்ணீர் தட்டுப்பாடு,மாசுபாடு ஆகியவை பற்றி சிந்திக்க வேண்டும்.
தொடரும்.(2)

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)