வெள்ளி, 9 ஆகஸ்ட், 2013

ஓட்டுனர்கள் தினவிழா - DRIVERS DAY

               DRIVER'S DAY! - ஓட்டுனர்கள் தினவிழா!

    மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
                    ''இந்திய ஓட்டுனர்கள்'' வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.நமது நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் ஓட்டுனர்களுக்கான தினவிழா இனி வருகிற ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் பத்தாம்தேதி அன்று கடைப்பிடிக்க உள்ளோம்.அன்றைய தினம் ஓட்டுனர்கள் அனைவரையும் ஒருங்கிணைக்கவும் உள்ளோம்.வாகனம் ஓட்டும் அனைவரும் ஓட்டுனர்களே என்பதனையும் சமூகத்திற்கு உணர்த்த உள்ளோம்.
         ( காரணம் நமது மற்றும் சமூகத்தின் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்ட''நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு'' என்னும் மாநில அளவிலான அமைப்பு கடந்த ஜூன் மாதம் பத்தாம் தேதி(10-06-2013) அன்று பதிவு செய்யப்பட்டது.)
                அன்றைய தினம் நமது ஓட்டுனர் சமூகத்திற்கு நம்மால் இயன்ற அளவு தன்னம்பிக்கை,உடல்நலம் பேண,ஆரோக்கிய வாழ்வு வாழ,தனி மனித ஒழுங்குபெற,எயிட்ஸ் போன்ற கொடும்வியாதிகளின் எச்சரிக்கை விழிப்புணர்வு,மன அழுத்தம் குறைய,குடும்ப உறவு மேம்பட,சமூக உறவு மேம்பட,ஓட்டுனர்களின் குழந்தைகளுக்காக கல்விநிலை மேம்படுத்த மற்றும் இங்கு ஓட்டுனர் பெருமக்களின் பணிச்சூழல்,துன்பங்கள்,சமூகத்தினால் உருவாகும் இடர்பாடுகள்,இயற்கைச்சீற்றங்களினால் ஏற்படும் இடர்பாடுகள்,அரசாங்கத்தினால் ஏற்படும் இடர்பாடுகள்,குடும்பத்தினால்,உறவினர்களினால்,அரசுத்துறையினரால்,
  மோட்டார்வாகனத்தினால்,நெடுஞ்சாலையினால்,
             ஓட்டுனர் பெருமக்களின் தனிமைத் தாக்கத்தினால்,சமூகத்தில் பிறக்க வைத்த நமதுஓட்டுனர்கள் சாலையில் வாழ்க்கை ஓட்டும் தனிமைப்படுத்தப்பட்ட விரக்தியினால்- என எல்லையற்ற பிரச்சினைகள்,சிக்கல்கள்,உயிருக்கு உத்திரவாதமின்மை,உரிய பாதுகாப்பு இன்மை,என பலவிசயங்களை உலகுக்கு உணர்த்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.அனைத்து ரக வாகன தொழில் சார்ந்த ஓட்டுனர்களின் அனுபவங்களை சேகரித்து இங்கு பதிவிட்டு உலகறியச்செய்வதே தற்போதைய நமது குறிக்கோள் ஆகும்.அதேபோல் தொழில் சாராத ஓட்டுனர்களின் எண்ணங்களையும் சேகரித்து இங்கு பதிவிட்டு சாலை பாதுகாப்பிற்கான பொதுவான தீர்வை அடைய முயற்சிப்போம்.
                   என பரமேஸ் டிரைவர்.சத்தியமங்கலம்-ஈரோடு மாவட்டம்.