திங்கள், 20 ஆகஸ்ட், 2012

வாகனம் ஓட்டும் பள்ளி மாணவர்கள்

மரியாதைக்குரிய நண்பர்களே,வணக்கம். 
      இது தினமலரில் வெளியான செய்தி.



     கிருஷ்ணகிரி நிருபர்;-        : கிருஷ்ணகிரி மாவட்டத்தில்இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை ஓட்டும், 18 வயதுக்கு குறைவான பள்ளி மாணவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க சிறப்பு காவல் படை அமைக்கப்பட்டுள்ளது என கலெக்டர் மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை
:கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 18 வயதுக்கு குறைவான பள்ளிமாணவ, மாணவியர்கள் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் ஓட்ட தடை செய்யப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள் பாதுகாப்பான பயணம் மேற்கொள்வதை உறுதி செய்திட கடந்த வாரம் பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள் அனைத்தும் 100 சதவீதம் தணிக்கை செய்யப்பட்டது.இதில், மாணவர்கள் பயணம் செய்ய தகுதியற்ற சில வாகனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், மாணவர்களின் பாதுகாப்புக்காக, 18 வயதுக்குட்பட்ட ஓட்டுனர் உரிமம் பெறாத மாணவர்கள் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை பள்ளிக்கு எடுத்து வருவதை தவிர்க்குமாறு கல்வி நிறுவனங்கள் மூலமும், ஆசிரியர்கள் மூலமும் எடுத்துரைக்கப்பட்டது.
ஆனால்
, எதையும் பொருட்படுத்தாமல் சாலை போக்குவரத்து விதிகளை மீறி பல்வேறு கல்வி நிறுவனங்களில் படிக்கும் ஓட்டுனர் உரிமம் பெறாத மாணவர்கள் தொடர்ந்து வாகனங்களை சாலைகளில் அதி வேகமாக ஓட்டி செல்வதோடு மட்டுமல்லாமல் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வாகனங்களை எடுத்து செல்கின்றனர்.இந்நிகழ்வு மாணவர்களின் உயிருக்கும் உடமைக்கும் சவால் விடும் செயலாகும். ஆகவே, சாலை விதிகளை மீறி ஓட்டுனர் உரிமம் இன்றி வாகனங்களை ஓட்டும் மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு
கல்வி நிறுவனங்களின் முன்பும் காவல் துறை அலுவலர்கள் வாகனத்தை ஓட்டும் மாணவர்களை ரகசியாக கண்காணித்து அவர்கள் மீது வழக்குபதிவு செய்து கடும் நடவடிக்கை எடுப்பார்கள்இன்று (ஆக.,9) முதல் வாகனம் ஓட்டும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல் துறை சார்பில் சிறப்பு படை அமைக்கப்பட்டு அவர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். படிக்கும் மாணவர்கள் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாகவும், உதவிகரமாகவும் திகழவேண்டும்சாலை விதிமுறைகள் பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டம் 100 சதவீதம் விபத்தில்லா மாவட்டமாக திகழ்ந்திட அனைத்து மாணவர்களும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக