திங்கள், 20 ஆகஸ்ட், 2012

விதிமீறல் உயிருக்கு ஆபத்து

மரியாதைக்குரிய நண்பர்களே,வணக்கம். 
       தினமலர் நாளிதழில் வெளியான செய்தி.



நமது நிருபர் குழு((தினமலர் -
மாவட்டத்தில்போக்குவரத்து விதி மீறலுக்கு
பஞ்சமேயில்லை. முக்கியரோடுகளை கண்காணித்தாலே, இதில் ஏராளமான வாகனங்கள் சிக்கும். ஆனால் இதை வட்டாரபோக்குவரத்து அலுவலர்கள்,போலீசார் முறையாக கண்காணித்தாலே, இதை முற்றிலும் ஒழிக்கலாம். ஆனால்போலீசாரும் சரி, வட்டாரபோக்குவரத்து அலுவலர்கள் ஆனாலும் சரி. இதை கண்காணிப்பதும் இல்லை. நான்குவழிச் சாலையில் சர்வீஸ்ரோட்டில் செல்ல வழி தவறும் வாகனங்கள், தே வேகத்தில் பின்னால் வந்து சர்வீஸ் ரோட்டில் செல்வதும் சகஜமாக உள்ளது .இதுமட்டுமின்றி நான்கு வழிச்சாலையில் கனரக வாகனங்கள் நிறுத்தப்படுவதும், ஆங்காங்கே தொடர்கின்றன.வேகமாக வரும் வாகனங்கள் இதை கவனிக்காது பின்னால் மோதுவதும் சகஜமாகிறது. இதில் இரவுநேரம் என்றால் விபத்துக்களுக்கு பஞ்சமேயில்லை.சரக்குகளை ஏற்ற பயன்படுத்தப்படும் லோடு ஆட்டோக்கள், லாரிகளில் பயணிகளை டிக்கெட் பெயரில் ஏற்றிச் செல்வதும், மாவட்டத்தில் அதிகளவில் காணமுடிகிறது. இதனால் விபத்துக்கள் உருவாகி, உயிரிழப்பு ஏற்படுகிறது.
இதுபோன்ற விபத்துக்கள் நடந்தா
@, குறிப்பிட்ட இரு நாட்களுக்கு, ஆங்காங்கே வட்டாரபோக்குவரத்து அலுவலர்கள்,போலீசார்சோதனையில் ஈடுபடுகின்றனர். அதன் பின்னர் அப்படியே விட்டு விடுகின்றனர்.
இதனா
லே விதி மீறல் வாகனங்கள் தங்களதுசேட்டையை தொடர்கின்றன. இது தொடர்பாக பலரின் ஆதங்கம்:
டி
.நளினி(விருதுநகர்): பள்ளி வாகனங்களை முறையாக பராமரிப்பு செய்வதில்லை. இதனை போலீசாரும், போக்குவரத்து அலுவலர்களும் கண்டும், காணாதது போல் உள்ளனர்.விபத்துக்கள் நடக்கும் போது மட்டுமே, நடவடிக்கை எடுப்பது வேடிக்கையாக உள்ளது. இது போன்று கவனக்குறைவாக இருக்கும் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க, அரசு முன் வர வேண்டும்.
ராஜகோபால்
(காரியாபட்டி): மினி டோர், ஆட்டோக்கள் அதிக எண்ணிக்கையில் ஓடுகின்றன. தொழில் போட்டி காரணமாக, சரக்குகளையும், ஆட்களையும் அதிக அளவில் ஏற்றிச் செல்கின்றனர். பள்ளி குழந்தைகளை ஆட்டோக்களில் போதிய பாதுகாப்பு இல்லாமல் ஏற்றிச் செல்வதால்<, விபத்து ஏற்படுகிறது.
ஒப்பந்த அடிப்படையில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்லும்
சில தனியார் வேன்களில், உட்காரகூட இடம் இல்லாமல் சிரமப்படுகின்றனர். இது போன்ற நிலைமையை தவிர்க்க, பெற்றோர் கவனமாக செயல்பட வேண்டும்.
ஆர்
.எஸ்.ராம குமரேசன்(ராஜபாளையம்): போக்குவரத்து விதிமுறை மீறல் டூ வீலர் ஓட்டுபவர்களில் இருந்து, கனரக வாகன டிரைவர் வரை உள்ளது. ஆட்டோ, கார், பஸ்களில் இத்தனை பேர் தான் பயணம் செய்யவேண்டும் என விதி உள்ளது.
இதை டிரைவர்கள் கண்டுகொள்வதில்லை
, விழிப்புணர்வு இல்லாததால், பயணிகளும் தட்டிகேட்காமல் உள்ளனர்.
லோடு
ஆட்டோ, லாரிகளில் பெண்கள் உள்பட பலர் பயணம் செய்கின்றனர். துரதிஷ்டவசமாக விபத்து நடந்தால், இவர்களுக்கு இழப்பீடு கிடைப்பதில் சிக்கல் உள்ளது.
இந்த
விதி மீறல்களுக்கு, போக்குவரத்து போலீசார் சிறிய தொகையில் அபராதம் வசூலிக்கின்றனர். இதை மாற்றி, அபராதத்துடன், வண்டிகளை பல மணிநேரம் காத்திருக்க செய்யவேண்டும்.
ராஜேந்திரன்
(சேத்தூர்): ஷேர் ஆட்டோ,லாரி,டிராக்டர்களில் அதிகமான அளவு மக்கள் பயணிக்கின்றனர்.இதனால் சில நேரங்களில் உயிர் இழப்பு ஏற்படுகிறது.
இதை போக்க முதலில் விழிப்புணர்வு
ஏற்படுத்த வேண்டும்.அளவுக்கு அதிமாக பயணிகளை ஏற்றச்செல்லும் வாகனங்கள் மீது, உரிமத்தை ரத்து செய்தல் போன்ற கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.
செந்தில்குமார்
, (நரிக்குடி): நரிக்குடி பகுதியில் சரக்கு வாகனங்கள் அனைத்துமே, ஆட்கள் ஏற்றிச் செல்லவே பயன்படுகிறது. ஆபத்து எனத்தெரிந்தும், வேறு வழியில்லாமல் மக்கள் சரக்கு வாகனத்தில் பயணம் செய்கினறனர்.
பள்ளிக் குழந்தைகள்
ஆட்டோவில் தொங்கியபடியே பயணம் செய்கின்றனர். வருமானத்திற்காக போக்குவரத்து விதிமுறைகளை மீறி செயல்படுகின்றனர். இவர்களை போலீசார் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாறன்ஜி
(சிவகாசி): ஆட்டோ, பள்ளி வாகனங்களில் அதிகளவு குழந்தைகளை ஏற்றக்கூடாது என்பது விதி. ஆனால் இதை யாரும் மதிப்பதில்லை. தடுக்க வேண்டிய போலீசார்,வட்டாரபோக்குவரத்து துறையினர் வேடிக்கை பார்க்கின்றனர்.விவசாயத்திற்கு மட்டும் பயன்படுத்த வேண்டிய டிராக்டர்களில் கூட,ஆட்களை அதிகளவு ஏற்றி பணம் சாம்பாதிக்கின்றனர்.
பி
.டி.கே..பாலசுப்பிரமணியன் (சாத்தூர் ): நான்கு வழிச்சாலை ஒட்டல்கள் செல்ல, குறுக்கு வழியில் சாலையை கடக்கின்றனர். இதனால் கண் இமைக்கும் நேரத்தில் விபத்து ஏற்படுகிறது. இருசக்கரவாகனம் ஒட்டுபவர்கள் எந்தப்பக்கம் திரும்புகிறார்களோ, அந்தப்பக்கம் கை காட்டி சிக்னல் செய்து திரும்ப வேண்டும்.ஆனால் யாரும் இதை பின்பற்றுவது இல்லை. பஸ் மேற்கூரைகளில் எல்லாம் பயணிகள் பயணிக்கின்றனர்.இதை அதிகாரிகள் கண்காணித்து,பயணிப்போர் மற்றும் பஸ் டிரைவர் ,ஓட்டுனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக