புதன், 9 ஏப்ரல், 2014

தேசிய ஓட்டுனர்கள் தினம் -2014

மரியாதைக்குரியவர்களே,
                   வணக்கம். 
           ''இந்திய ஓட்டுனர்கள்'' வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன். அனைத்து வகை வாகனங்களின் ''தேசிய  ஓட்டுனர்கள் தினவிழா'' நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.முதல் கட்டமாக மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மோட்டார் சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் சங்கங்களை அணுகி தக்க ஆலோசனை கேட்க வேண்டும்.லோகோ உருவாக்க வேண்டும்.
          

             ஓட்டுனர்  என்றால் யார்? என்பது பற்றி காண்போம்.
               
                  போக்குவரத்துக்கான பொதுச்சாலையில் வாகனம் ஓட்டுவதற்கான உரிமம் (Driving Licence)  யார், யாரெல்லாம் எடுத்து உள்ளார்களோ? அவர்கள் எல்லாம் ஓட்டுனர்களே.
                   இரு சக்கர வாகனம் முதல் சரக்கு வாகனம் மற்றும் பயணிகள் வாகனம் வரை  இலகு ரக வாகனம் முதல் கனரக வாகனம் வரை என போக்குவரத்துக்கான வாகனங்களை ஓட்டுவதற்காக உரிமம் பெற்றவர்கள்  அனைவருமே ஓட்டுனர்களே!.அதாவது 
       (1)சம்பளத்திற்காக அல்லது ஓட்டுவதையே தொழிலாகக்கொண்டு ஓட்டுபவர்கள், 
   (2) தன் தேவைக்காக சொந்த வாகனத்தை ஓட்டுபவர்கள். 
           சொந்த வாகன ஓட்டிகள் என்பவர்கள் தனது தேவைக்காக (Self Drivng) இரு சக்கர வாகனமாக இருந்தாலும் சரி,நான்கு சக்கர வாகனமாக இருந்தாலும் சரி,
                சாமான்ய மனிதனிலிருந்து ஜனாதிபதி வரை யாராக இருந்தாலும் வாகனம் ஓட்ட உரிமம் பெற்று இருந்தால் அவர் ஓட்டுனரே.இதற்கு நிறுவன அதிபர் என்றோ,, நிர்வாக இயக்குனர் என்றோ,, அரசுத்துறை அதிகாரி  என்றோ தனியார் துறை அதிகாரி  என்றோ   என்றோ வேறுபாடு கிடையாது.
                  போக்குவரத்திற்காக பொதுச்சாலையில் வாகனம் ஓட்டுபவர்கள் அனைவரும் ஓட்டுனர் என்றே தன்னை முழுக்க, முழுக்க உருவகப்படுத்திக்கொண்டு வாகனத்தை தற்காப்புடன் ஓட்ட வேண்டும்.!!!.
            இவ்வாறாக வாகனம் ஓட்டிகள் அனைவருக்கும் போக்குவரத்து என்னும் சாலைப் பயணம் பொதுவானது.போக்குவரத்து சட்டங்கள் அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.போக்குவரத்து விதிகளையும் தெரிந்து கடைப்பிடிக்க வேண்டும்.சைகைகளையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.மதிக்கவும் வேண்டும்.முதலுதவி பயிற்சி பெற்று இருக்க வண்டும்.ஆயுள் காப்பீடு வசதி செய்து இருக்க வேண்டும்.மற்றவர்களை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.சகிப்புத்தன்மையும் ,பொறுமையும் வேண்டும்.இந்த மனப்பாங்குதான் சாலைப்பயணத்தை இனிதாக்கும்.பாதுகாப்பாக்கும்.
          இதனை அனைவரும் உணரச்செய்யவேண்டிய கட்டாயத்தில் இன்று நாம் உள்ளோம்.எனவே 
              ''தேசிய ஓட்டுனர்கள் தினம்'' என்றொரு நிகழ்வை கடைப்பிடிக்க சென்ற ஆண்டு2013ஆம் ஆண்டு  ஜூன் மாதமே தீர்மானிக்கப்பட்டு உள்ளது.
                     அதன் முதலாவது ஆண்டாக இந்த ஆண்டு 2014-06-10 ஆம் தேதி தேசிய ஓட்டுனர்கள் தினவிழா கடைப்பிடிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
                      தமிழகம் முழுவதும் உள்ள பைக்,ஆட்டோ,கார் (தனியார் மற்றும் அரசுத்துறைகள்),ஆம்னி,ஜீப்,சுற்றுலா வாகனங்கள்,பள்ளி மற்றும் கல்லூரி பேருந்துகள், தினசரிப் பயணிகளுக்கான  வழித்தடப்பேருந்துகள் (தனியார் மற்றும் அரசுப் பேருந்துகள்), மினி ஆட்டோ,டெம்போ,வேன்,டிப்பர் லாரி,கனரக சரக்கு வாகனங்கள்,டிரெய்லர்,டேங்கர்,உள்ளிட்ட
                    பொதுச்சாலையில் பயணிக்கும் அனைத்து வாகனங்களின் ஓட்டுனர்களுக்கு புத்தாக்கப்பயிற்சி கொடுக்கும் வகையிலும்,சாலைப் பாதுகாப்புக் கல்வி கொடுக்கும் வகையிலும்,முதலுதவிப்பயிற்சி,காப்பீட்டு வசதியின் முக்கியத்துவம் என போக்குவரத்து சம்பந்தமான அனைத்து பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் எடுக்க உள்ளோம்.
இன்னும் இரு மாதங்கள் உள்ளதால் தங்கள் மேலான கருத்துக்களையும்,ஆலோசனைகளையும் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக