செவ்வாய், 26 நவம்பர், 2013

திருமிகு.கவிஞர்.தணிகை ஐயா அவர்களுக்காக

மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.ஓட்டுனர் தொழில் பல்வேறு சிக்கல் நிறைந்த தொழில்..கலைநயமிக்க புனிதமான தொழில்.ஆனால் பல ஓட்டுனர்களின் தவறுகளால் சமூகத்தினரிடையே தவறான கண்ணோட்டமும் அதன் விளைவுகளும் அதற்கான உதாரணம் இந்த பதிவுங்க...தேதி;26-11-2013


    உலவ சகிப்புத் தன்மை வேண்டும்:
     புகைத்தல், கழித்தல், குடித்தல், துப்பல், பயணிகளை திட்டல், இப்படி எனது சிறு பயணம் நேற்று இருந்தது. தியானம் செய்து விட்டதால் பொங்கி எழவில்லை சகித்துக் கொண்டேன். சென்று வந்தேன் பொருமல்களுடன்.
நேற்று ஒரு சிறு பயணம் கிராம வழிச் சாலைகளில் சென்று வர நேர்ந்தது. போக வர ஒரு 40கி.மீ தான் இருக்கும். பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தேன். மழை வரா மேட்டூர் ஒரே புழுதிக்காடு சாலை யோரம் எங்கும்.
சில பயணிகள் நின்று கொண்டிருந்தனர். உடனே 2 பெண்கள் வந்தனர். கையில் ஒரு நடக்க முடிந்த 5 வயதில் இருந்த ஒரு பெண் குழந்தை. வந்த சில நிமிடங்களிலேயே அந்தக் குழந்தையை (அந்த குழந்தையும் செருப்பணிய வில்லை) கீழே இறக்கிவிட்டு சிறுநீர் கழிக்க வைத்தனர். அந்த இடத்திலேயே. யாரும் இருக்கிறார்கள் இல்லை என்ற கேள்வி இன்றி. உடனே அந்தக் குழந்தையை எடுத்து இடுப்பில் வைத்துக் கொண்டார் அந்தத் தாய். பார்ப்பதற்கு நாகரீகமான ஆடைதான் இருந்தது. செயலில் நாகரீகம் இல்லை.
அரசுப்பள்ளி சிறுவர்கள் ஒரு 30 பேர் வரை வந்து பேருந்து ஏறினர். அவர்களின் கால்களில் இரண்டு மூன்று பேருக்கு மட்டுமே காலணி இருந்தது. இப்படி சிறுநீர் கழிக்கும் நாட்டில் எப்படி சிறுவர்கள் எப்படி செருப்பின்றி பேருந்து ஏறுவது மிதித்தபடி… உயர்நிலைப் பள்ளி படிக்கும்போது தாமும் செருப்பணியாது பள்ளிக்கு சென்று வந்ததும் அந்த நாட்களில் இப்படிப்பட்ட கோளாறுகள் கவனிக்கப்படாதது நினைவில் வந்தது. அப்போது பேருந்து இலவச பாஸ் எல்லாம் இல்லை. நடந்துதான் சென்றோம் ஆனால் அவ்வளவு அசுத்தம் இருந்ததா? என்றெல்லாம் இல்லை என்றே சொல்லத் தோன்றுகிறது.
அடுத்து நங்கவள்ளி என்ற ஊருக்கு வரும் வழியில் ஒரு மரத்தடி பேருந்து நிறுத்தத்தில் இருந்து எழெட்டு பேர் அல்லது 10 பேர் வரை இருக்கும் தாய்மார்கள் குழு ஒன்று அந்த டவுன் பஸ்ஸில் ஏறியது. சிலர் ஏறியவுடன் அந்த ஓட்டுனர்- என்னம்மா படியில் ஏறுங்கம்மா என்று சத்தமிட்டார். ஏழெட்டு பேர் ஏற வேண்டாமா, எல்லாம் ஏற வேண்டாமா என்பது போல அந்த முதிய வயது தாய்மார்கள் கேட்டதற்கு: அந்த அரசு பேருந்து ஓட்டுனர்: எங்க வீட்டு விஷேசத்துக்கா வருகிறீர்? என்றார் . பதில் இல்லை. எனக்குள் கொப்பளித்தது கோபம் . அடக்கிக் கொண்டேன். இவன் வீட்டு விஷேசத்துக்கு வருகிறார்கள் என்றால் மெதுவாக ஏற அனுமதிப்பானாம். இவர்கள் அந்நியர்கள் எனவே சீக்கிரம் ஏறியாகவேண்டும் என்ற தொனி அவனது பதில் சொல்லியது. அரசு பஸ் இவனுடையதா?
நல்லவர்கள் , நம்மவர்கள், நமக்கானவர்கள் என்றே இந்நாட்டு தலைவிதி நாசமாகப் போய்விட்டது. தாய்மார்கள் அதுவும் வயதானவர்கள் 10 பேரும் மின்னல் மாதிரி ஏறி விட முடியுமா? இவன் தாய் தந்தை, மனைவி மக்களாய் இருந்தால் இவன் என்ன செய்வான் என்பது போன்ற கேள்விகள் அடுக்கடுக்காக….
நங்கவள்ளி வந்து மறு பேருந்து ஏற ஒரு கடையில் நிழலுக்காக ஒதுங்கினேன். அந்த கடைக்கார நண்பர் கொண்டுவந்து இருந்த டிபன் பாக்ஸை கழட்டிப் பார்த்துவிட்டு வீட்டில் இருந்து உணவு எடுத்து வந்திருப்பார் போலும் குழம்பை பார்த்துவிட்டு மூடி வைத்துவிட்டு சார், கொஞ்சம் கடையை பார்த்துக் கொள்ளுங்கள், நான் சிறு நீர் கழித்துவிட்டு வருகிறேன் என்றார். இல்லை . நான் பேருந்துக்காக காத்திருக்கிறேன். பேருந்து வந்தவுடன் போக வேண்டுமே எனச் சொல்ல, இல்லை சார் சில நிமிடங்களில் வந்து விடுகிறேன் எனச் சொல்லிவிட்டு யாராவது வந்தால் காத்திருக்கச் செய்யுங்கள் எனச் சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.
இவர் போனவுடன் சொல்லிவைத்தமாதிரி ஒருவர் கையில் பில்டர் சிகரெட்டுடன் ஒருபக்கமும் மறுபக்கமும் ஆதிபராசக்தி கலருடன் இருந்த ஒரு தம்பதி, பெண் முழுகாதிருக்கிறாள், ஆண் தாடி மீசையுடன் உதட்டில் பீடியுடன் நடுவில் நான் அடுத்த எரிச்சலுடன் என்ன , கடைக்காரர் எங்கே எனக் கேட்க இதோ வந்துவிடுவார் சிறு நீர் கழிக்கச் சென்றுள்ளார் வந்துவிடுவார் எனச் சொல்ல, நல்லவேளை எனது பேருந்து வரவில்லை அதுவரை . கடைக்காரர் வந்துவிட்டார். அவரிடம் இந்த பில்டர் சிகரெட் கேட்கிறது: இன்று எனது சம்பளம். மாட்டுத் தீவனம் எல்லாம் சேர்ந்து ஒரு 200 ரூபாய்க்கு கொடுங்கள் என, அவரோ இல்லை கொடுக்க வழியில்லை எனச் சொல்லும்போதே எனது பேருந்து வந்து சேர அந்த கடைக்காரரின் நன்றிகளுடன் புறப்பாடு நடந்தது.
என்று நமது சிறுவர் சிறுமிகளுக்கு சுற்றுப்புறச் சுகாதாரம் பற்றி போதிப்பது? என்று தமது குடிகார நாய்களும், புகைவிடும் பேய்களும் பொது இடங்களில் எப்படி நடந்து கொள்வது என்று கற்றுக் கொள்வது?
எமைப்போன்றோர் இனி பொது இடங்களில் பயணம் போவது என்பதும், வாயை அடக்கிக் கொண்டு வருவது என்பது சற்று சகிப்புத்தனம் தேவைப்படும் இடங்களாகின்றன. இந்திய சுதந்திரம் இவற்றுக்குதான். மற்றபடி பெரிய சாதனைகள் எல்லாம் வெளித் தெரியாமல் இருக்கின்றன. வெளிநாட்டு வங்கிகளும், அமைதிகாக்கின்றன. ராகுல் காந்தி எம்.பிக்களுக்கும், எம்.எல்.ஏக்களுக்கும் பவரை சேர்த்த, திருமணமே செய்ய மாட்டேன் எனச் சூளுரைக்கிறார். இங்கு தேர்தல் வரும்வரை பவர் வந்து சேராது போல் உள்ளது இயல்பான சூழலுக்கு…
நான் உலவுவதற்கேற்ற இடமாக இந்த இடங்கள் எல்லாம் இல்லை என மகனிடம் ஒரு மனந்திறந்த எண்ண ஒப்புதல்கள். இளைஞனாய் இருக்கும்போது இந்த இடங்களில் எல்லாம் நான் சண்டை போட்டே வந்திருக்கிறேன் என நினைக்கும்போது தனிமனிதரால் என்ன பெரிதான மாற்றத்தை கொண்டுவரமுடியும்? ஆட்சி மாற்றம் தவறானவர்கள் கைகளிலே போய் சேரும்போது?
வேலாயுதத்துக்கு துணை தேவைப்படுகிறது. நினைவுப் பிறழ்தல்கள். சசி பெருமாளுக்கு 33 நாள் உண்ணாவிரதம் போதுமானதாகிவிட்டது. எனக்கும் 50 வயது ஆகிவிட்ட நிலையில் ஒரு மகன் தற்போதுதான் 9ஆம் வகுப்பு ஆண்டுத் தேர்வு எழுத இருக்கிறார். எனவே இந்த வெளிப்பாடு கூட ஒரு வடிகால் அவ்வளவுதான்.
மறுபடியும் பூக்கும்வரை
கவிஞர் தணிகை.
மேற்கண்ட விமர்சனத்திற்கு எனது விமர்சனமும் திருமிகு, ஐயா அவர்களது கருத்துரைகளும்   இதோ;-

  1. parameswaran c சொல்லுகின்றார்:
    மரியாதைக்குரியவரே,வணக்கம்.தங்களைப்போன்றோருக்கே சகிப்புத்தன்மை இல்லை என்பதை தங்களது பதிவில் காண முடிகிறது.
       ''சிலர் ஏறியவுடன் அந்த ஓட்டுனர்- என்னம்மா படியில் ஏறுங்கம்மா என்று சத்தமிட்டார். ஏழெட்டு பேர் ஏற வேண்டாமா, எல்லாம் ஏற வேண்டாமா என்பது போல அந்த முதிய வயது தாய்மார்கள் கேட்டதற்கு: அந்த அரசு பேருந்து ஓட்டுனர்: எங்க வீட்டு விஷேசத்துக்கா வருகிறீர்? என்றார் . பதில் இல்லை. எனக்குள் கொப்பளித்தது கோபம் . அடக்கிக் கொண்டேன். இவன் வீட்டு விஷேசத்துக்கு வருகிறார்கள் என்றால் மெதுவாக ஏற அனுமதிப்பானாம். இவர்கள் அந்நியர்கள் எனவே சீக்கிரம் ஏறியாகவேண்டும் என்ற தொனி அவனது பதில் சொல்லியது. அரசு பஸ் இவனுடையதா?
    நல்லவர்கள் , நம்மவர்கள், நமக்கானவர்கள் என்றே இந்நாட்டு தலைவிதி நாசமாகப் போய்விட்டது. தாய்மார்கள் அதுவும் வயதானவர்கள் 10 பேரும் மின்னல் மாதிரி ஏறி விட முடியுமா? இவன் தாய் தந்தை, மனைவி மக்களாய் இருந்தால் இவன் என்ன செய்வான்''
                        என்பது போன்ற கேள்விகள் அடுக்கடுக்காக….
                              அது என்னங்க அரசு பேருந்து ஓட்டுனர் என்றால் மட்டும் கீழ்த்தரமான வார்த்தைகள் வருகிறது.தங்களுக்கே அவமானமாக தெரியவில்லையா?அப்படி என்னங்க தவறு நேர்ந்துவிட்டது அந்த ஓட்டுனரால்.வாங்க நாகரீகமாக விவாதம் செய்வோம்.எனது மின்னஞ்சல் முகவரிக்கு.அதனால் நாட்டு மக்களுக்காவது உண்மை புரியட்டும்.அல்லது ஓட்டுனர்களை தெளிவடையச்செய்வோம்.அல்லது தங்கள் பதிவு தவறு என உணருங்கள்.என அன்புடன் பரமேஸ் டிரைவர்-தாளவாடி.23-11-2013
    • marubadiyumpookkum சொல்லுகின்றார்:
      உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு வரச்சொல்லிவிட்டு தராமலே வரச்சொன்னால் எப்படி வரமுடியும் பரமேஸ்வரன்.பரவாயில்லை மின்னஞ்சல் முகவரியில் எழுதுவது இருவருக்கு மட்டுமே தெரியும். வலைப்பூவில் அதைவிட அனைவரும் படிக்க ஏதுவாகும். நீங்கள் உங்கள் கருத்துக்களைத் தாராளமாக தெரிவிக்கலாம்.நாட்டு மக்களுக்கு உண்மையை புரியவைக்க அவசியம் வருக.பதிவு தவறு என நீங்கள் புரியவைக்கும் முயற்சிக்கு நீங்கள் ஓட்டுனர் என்ற ஒரு காரணம்தான் சொல்கிறீர்களே தவிர காரண காரியத்தை முன்வைத்து உஙகளின் விவாதம் இல்லை. எங்காவது எப்போதாவது அத்திப் பூத்தாற்போல இருக்கும் ஒரு சில நல்ல ஓட்டுனர் தவிர(நான் பார்த்தவரை) பெரும்பாலும் இந்த போக்குவரத்தில் மக்களை எல்லாம் அற்பமாக மதிப்பதை பலவாறாக அடியேன் கண்ட அனுபவமுண்டு.
      முன்பு எல்லாம் இதற்காகவே பலமுறை பொது இடங்களில் சண்டை செய்ததுண்டு. இப்போது சலித்துப்போய்விட்டது. சகிப்புத்தன்மை இருந்ததால்தான் அந்த ஓட்டுனரை அன்று திருப்பி வார்த்தையால் அடிக்காமல் அமைதியாக இருந்து கொண்டேன். அப்படி என்ன செய்துவிட்டாரா? அதைத்தான் சொல்லியிருக்கிறேனே…எம் வீட்டு விஷேசத்துக்கா வருகிறீர் என்றால் என்ன பொருள்? அவர் வீட்டு விஷேசம் என்றால் மெதுவாக ஏற அனுமதிப்பார் அப்படித்தானே? மேலும் ஏறுபவர்கள் எல்லாம் நாம் முன்பே சொன்னபடி எல்லாம் வயதான தாய்மார்கள் சுமார் 10 பேர் ஏறுவதென்றால் உரிய நேரம் தேவைதானே? அதைக்கூட சகித்துக்கொள்ளாமல் என்ன பணி ஓட்டுனருடையது? உண்மையாகப் பார்க்கப்போனால் ஓட்டுனருக்கு பயணிகளிடம் பேச வேண்டிய வேலை கண்டிக்க வேண்டிய வேலை இல்லை. அது நடத்துனரின் வேலை. ஏறுவதையும் இறங்குவதையும் கண்காணிக்கவேண்டியது நடத்துனர், ஓட்டுனர் அல்ல. மேலும் அந்த நபருக்கு சகிப்புத்தன்மை இல்லாததால்தான் அவர் அப்படி துரிதப்படுத்தி வார்த்தைகளை கொட்டுகிறார். நாகரீகம் உள்ளவர்க்கு நாகரீகம் அளிக்கவேண்டியதுதான்.நான் பதிவு செய்துள்ளதே சற்று நாகரீகமாகத்தான் அந்தஓட்டுனரின் வார்த்தை தெறிப்பையும் உணர்ச்சிக்குழம்பையும் வடிகட்டித்தான். அவரின் வேலை ஒழுங்காக பயணிகளை உரிய இடங்களில் உரிய நேரத்தில் கொண்டு சேர்ப்பதுதான். எவரையும் எந்தப் பயணியையும் திட்ட இவருக்கு உரிமை இல்லை. சாவுகிராக்கி என்பதும், வந்திடுதுங்க எழவு என்பதும் இன்னும் மோசமான வசவுகளும் பேசிட இவர்க்கு எவர் உரிமை அளித்தது தாங்கள் விளக்கவும்.
      பயணிகளையும், பேருந்தையும் முதலில் பாதுகாப்பாக கையாள்வதை தெளிவாக தவறின்றி செய்தாலே அந்தப்பணிக்காக பொதுநலத்தில் ஆர்வமுள்ளவர் என்ற முறையில் அந்த அரசுப்பணியாளர்களுக்கு எமது நன்றிகள் உரித்தாகும்.
      நமது தாய்த்திருநாட்டில் இதை எல்லாம் யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.அவ்வப்போது மறந்துவிடுகிறோம். ஆடை அழுக்காக, ஏழ்மையாக, எளிமையாக இருந்தால் வாய்யா, போய்யா என்பதும், மிடுக்காக இருந்தால் சார் என்பதுமாக வா போ நீ என்று ஒருமையில் பேசுவதை விட யாம் ஒன்றும் தரம் தாழ்ந்த பதிவு இட்டுவிட வில்லை. இதைப்பொதுவாகவே எழுதியுள்ளேன். தனிப்பட்ட முறையில் ஏதாவது செய்ய வேண்டும் என்றால் அவரின்பெயர், அடையாளம் , பணிமணை எல்லாம் தெரிந்து கொண்டு புகார் அளித்திருப்பேன் முன்பெல்லாம் அப்படி செய்ததுமுண்டு அதே வேலையாக திரிந்துகொண்டு இப்போதெல்லாம் அதைவிட முக்கியமான பணிகள் இருப்பதாலும் தனிப்பட்ட நபர்களின் வாழ்வு நம்மால் பாதிக்கப்படக்கூடாது என்பதாலும் அதை எல்லாம் தற்போது செய்வதில்லை பரமேஸ்வரன். உம்போன்றோரை புண்படுத்தவேண்டும் எவரையும் புண்படுத்தவேண்டும் என்பதல்ல் யாம் எழுதுவது பண்படுத்தவே. எனவே நல்லவர்களை காயப்படுத்தி இருந்தால் அதற்கு எமது மறு மொழி: வருத்தமும் மன்னிப்பும்.
      மறுபடியும் சொல்கிறேன்: இவருக்கு வேண்டியவர் அல்லது அவருக்கு சொந்தம், நட்பு என்று ஒரு மாதிரியும், அந்நியர், பிறர், வேற்று மனிதர் என்பதற்காக வேறு மாதிரியும் நடந்து கொள்ளும் இயல்பை பேருந்துகளில் பலமுறை பார்க்கிறோம். ஏன் பேருந்தை நிறுத்துவதே கூட அப்படி இருக்கின்றன. பொது வாழ்வில், பொதுப்பணிகளில் ஈடுபடுவோர்க்கு முதலில் நாகரீகம் அவசியம் அதைவிட நயமான பேச்சும், சிரித்த முகமும், சீரிய நடையும் அவசியம். எமக்கும் மிகவும் பிரியமான என்றும் மறவாத சீருடைப்பணியாளர்களைத் தெரியும் எல்லாத் துறைகளிலுமே. ஆனால் அவை எல்லாம் சிறு துளியே.
      எம்மோடு எப்படி பழகுகிறார் என்பதை விட பாமரரோடு எப்படி பழகுகிறார் என்பதை வைத்து நாம் எதையும் பார்க்கிறோம். எனவே நீங்கள் இந்த பதில் தருவதைப்பார்க்கும்போது ஒரு நல்ல ஓட்டுனராய் இருக்கலாம் என்பது தெரிகிறது. அதையே உமது வட்டத்துள் இருக்கும் நண்பர்களிடமும் கொண்டு செல்ல முயலுங்கள் உம்மால் முடிந்த சேவை அதுவாயிருக்கட்டும்.
      சேவை மனப்பான்மையுள்ளவர்கள் பொதுப்பணிக்கு வந்தால்மட்டுமே இதற்கெல்லாம் தீர்வு. இவற்றை எல்லாம் ஊதியத்துக்கான வேலை என்று இருப்போர் எல்லாம் வந்தால் இதுபோன்ற எரிச்சலும், புகைச்சலும், பொறுமையின்மையும், சகிப்புத்தன்மையின்மையும் ஏற்படுவது இயல்புதான். அதன் வெளிப்பாடுதான் அந்த பதிவு
      இந்த பதிவிற்கான உமது பின்னோட்டத்தை தந்தமைக்கு நன்றி. தஙகளது வருகைக்கு நன்றி. தொடர்ந்து வாருஙகள் உமது கருத்துக்களைத் தெரிவியுங்கள். கீழ்த்தரமாக இல்லாமல் ஆரோக்யமாக இருக்கும்வரை அப்படியே பிரசுரிப்பேன் எந்தவித எடிட்டிங்/ வெட்டுதலும் நீக்கலும் இல்லாமல்… வணக்கம்.
      மறுபடியும் பூக்கும்வரை:
      கவிஞர் தணிகை.
  2. parameswaran c சொல்லுகின்றார்:
    மரியாதைக்குரிய கவிப்பெருங்கொடை அவர்களே,வணக்கம்.முதலில் தங்களுக்கு சமூகம் சார்ந்த எனது நன்றிகள் பல.காரணம்.உடனே தகுந்த பதில் கொடுத்துள்ளமைக்காக! தங்களிடம் வேண்டுவது என்னவென்றால் என்னை புண்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளீர். அதை நான் பொருட்டாக எடுப்பதில்லைங்க.அதே சமயம் தாங்கள் நாகரீகமாக பதிவிடலாமே.என்பதுதாங்க.அதனால் தங்களது கவித்தன்மைக்கு மரியாதை வேண்டும் என்பதற்காகத்தாங்க.மற்றபடி தங்களது வரிகளான ”பரமேஸ்வரன். உம்போன்றோரை புண்படுத்தவேண்டும் எவரையும் புண்படுத்தவேண்டும் என்பதல்ல் யாம் எழுதுவது பண்படுத்தவே.” என்ற வரிகளுக்கு மதிப்பளிக்கிறேன்.பொதுச்சேவை என்பது மக்கள் சேவைதாங்க.அதில்தான் போக்குவரத்தை பொறுத்தவரை எத்தனை,எத்தனை இடர்பாடுகள்.காலக்கணிப்பீடு.,வேகக்கணிப்பீடு.,பல்வேறு சிக்கல்கள் நிறைந்த பணிச்சூழல்.,பலமுனை நெருக்கடிகள்.,இவற்றையெல்லாம் சந்திக்கும்போது அதன் கொடூரம் எங்கு கொண்டு போய் கொட்டுவது.இருப்பினும் ஒரு சிலர் செய்யும் தவறுக்காக பொதுமக்கள் என்ற வட்டத்தில் உள்ளவர்கள் என்னவோ பேசிவிட்டு போகட்டும்.ஆனால் கவிஞராகிய தாங்கள் நாகரீகம் இழக்கக்கூடாது என்பதே எனது வாதம்.எனது கருத்துப்படி தாங்கள் நினைத்தால் கருத்தரங்மே நடத்தலாம்.விவாதக்களம் நடத்தலாம்.அதில் நானும் பங்கு பெறுகிறேன்.இதனால் நமது விருப்பு வெறுப்புகளை விட சமூகத்திற்கு நல்ல விசயங்கள்,உண்மையான காரணங்கள் கிடைக்கும் என்பதே எனது வாதம்.வாய்ப்பு கிடைத்தால் அவசியம் நான் தங்களை நேரில் சந்திக்கிறேன்.நன்றிங்க.
    • parameswaran c சொல்லுகின்றார்:
      மரியாதைக்குரியவரே,வணக்கம்.விடுபட்டு கருத்து தெரிவிப்பதாக தாங்கள் கருதாதீர்.காரணம்.மின்தடை ……..காந்தியவாதியான தாங்கள் எங்களது அழைப்பினை ஏற்று வருகிற ஜனவரி முதல் வாரம் நடத்தும் சாலை பாதுகாப்பு வாரவிழாவில் ஒருநாள் நடத்தும் கருத்தரங்கத்தில் கலந்துகொள்ள வேண்டும்.என விருப்பதினை முதலில் இங்கு பதிவிடுகிறேன்.அந்த கருத்தரங்கம்-விவாதக்களமாக மாறலாம். எது எப்படியாயினும் நல்ல பொதுவான முடிவை எட்ட வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட விருப்பம்.அதனால் பத்துப்பேர் தெளிவு பெற்றால் அதுவே சமூகத்திற்கு செய்யும் சிறப்பான சேவைங்க..அந்த சமயம் தாங்கள் போக்குவரத்து சம்பந்தப்பட்ட(1)அரசுப்பேருந்து மற்றும் தனியார் பேருந்து ஓட்டுனர்கள்,நடத்துனர்கள்,மற்ற தொழிலாளிகள்,அதிகாரிகள்,உரிமையாளர்கள்,அரசின் நிலை (2)லாரி ஓட்டுனர்கள் உட்பட தொழிலாளர்கள்,உரிமையாளர்கள்,(3)டெம்போ,(4)டிராவல்ஸ்,(5)ஆம்னி (6)இருசக்கர வாகன ஓட்டிகள்,(7)தொழில் சார்ந்த ஓட்டுனர்கள்,(8)தொழில் சாராத ஓட்டுனர்கள்அனைத்த வகையான போக்குவரத்தில் நடைபெறக்கூடிய தவறுகள்,விபத்தின் காரணங்கள்,விபத்தை தவிர்த்து மக்களின் உயிர்களை காக்க ஆலோசனைகள் என தங்களால் இயன்ற அளவு குறைகளை,தவறுகளை,சேகரித்து வாதாட வேண்டும் என்பதே எனது தாழ்மையான விருப்பம்.அப்போது நடக்கும் விவாதம் நமக்கு வேண்டுமானால் சண்டையாக இருக்கலாம்.அதன் சாராம்சம் பொதுமக்களுக்கு தெளிவு கொடுக்கும் நிகழ்வாக அமையும்.மற்றவை நேரில்.இப்படிக்கு சமுதாய நலனுக்காக அன்பன் C.பரமேஸ்வரன்.அரசுப்பேருந்து ஓட்டுனர்-தாளவாடி கிளை.ஈரோடு மாவட்டம்.எனது E mail ID= paramesdriver@gmail.com. எனது Mobile # 9585600733
      Facebook ID= parameswarandriver.,சமூக நல இயக்கத்தின் பெயரும் நான் வகிக்கும் பொறுப்பும். செயலாளர்-நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு பதிவு எண்-26/2013
      எனது வலைப்பூக்களில் சில தங்களது பார்வைக்கு
      (1)paramesdriver.blogspot.com.,(2)konguthendral.blogspot.com.,(3)consumerandroad.blogspot.com.,(4)tnsfthalavady.blogspot.com.,
      (5)tnsfsathy.blogspot.com
      • marubadiyumpookkum சொல்லுகின்றார்:
        தங்களின் வேண்டுகோளுக்கு முயற்சிக்கிறேன் என்பது மட்டுமே தற்போது அடியேன் தரமுடியும் பதிலாகும். உங்களைப்பற்றி உங்கள் ஆர்வம் சமூக அக்கறை பற்றி உமது சொல்லும் செயலும் வலைப்பூக்களும் வெளிப்படுத்துகின்றன. அடியேன்பற்றிய சிறு குறிப்பு:11நூல்கள் வெளியிட்டுள்ளேன்.குடியரசு தலைவராக இருந்தபோதே டாக்டர்.அப்துல்கலாம் எமக்கு கடிதம் எழுதியுள்ளார். உச்ச நீதிமன்ற நீதிபதியாக பி.என்.பகவதி இருந்தபோது அவருடன் மேடையில் சேர்ந்து பேசும் வாய்ப்பும் அவருடன் அரை நாள்கழித்து அவருடன் மதிய உணவு அருந்தவும் வாய்ப்பு பெற்றேன். எமது முதல் புத்தகம் உலகின் மிகப்பெரும் நூலகக் கூட்டமான அமெரிக்கன் நூலகக்கூட்டத்தில் வாழ்க்கை குறிப்புடன் இடம்பெற்றுள்ளது.
        அதல்லாமல் இந்தியாவின் பல பின் தங்கிய மாநிலங்களிலும் உள்ள மலைவாழ் மக்களுக்கு மற்றும் தாழ்த்தப்பட்ட இன மக்களுக்கு 10 ஆண்டுகளுக்கு மேல் சேவை புரிந்தவன். மேலும் தற்போது கீழ்கண்ட வலைப்பூக்களிலும் சமூக வலைதளங்களிலும் எமது எழுத்துக்கள் வெளிப்பட்டு வருகின்றன.
        http://www.dawnpages.wordpress.com
        http://www.thanigaihaiku.blogspot.com
        Tanigai Ezhilan Maniam.fbk.com
        tanigaiezhilan.twitter.com
        tanigai.ezhilan. skype
        Tanigai maniam Google+ at present I am conducting Deiva meditation centre;Deiva counselling centre and doing once in two day writing Giraffiti. etc.
  3. parameswaran c சொல்லுகின்றார்:
    மரியாதைக்குரியவரே,வணக்கம்.தங்களது எண்ணங்களைப்புரிந்துகொண்டேன்.தங்களது உயர்ந்த செல்வாக்கும் அறிந்துகொண்டேன்.எனது விமர்சனங்கள் ஏதாவது தங்களை பாதித்து இருந்தால் அதற்காக சிரம் தாழ்த்தி மன்னிப்புக்கோருகிறேன்.எனது வெளிப்பாடு என்னவென்றால் தங்களைப்போன்ற சான்றோர்கள் என்ன பாதிப்புக்கு ஆளானாலும் ஆத்திரத்தாலோ,கோபத்தாலோ நாகரீகம் குறைவது சரியல்ல! என்பதே ஆகும்.பொது ஜனம் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.அவர்களை பற்றி கவலை இல்லைங்க!.அவசியம் நான் தங்களை நேரில் சந்திக்கிறேன்.அதற்கான வாய்ப்பினை கொடுக்க வேண்டுகிறேன்.அது மட்டுமல்லாது தங்களது புத்தகங்களை படித்து மேலும் என்னை பக்குவப்படுத்திக்கொள்வேன்.மிக்க நன்றிங்க! என அன்பன் parameswaran.c தாளவாடி-ஈரோடு மாவட்டம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக